யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2021 | 6:57 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழத்தின் மாணவர்கள் சிலர் இன்று (04) உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி யாழ். பல்லைக்கழகத்தில் எற்பட்டிருந்த இரு தரப்பினருக்கு இடையிலான மோதலின் பின்னர் 07 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதில் 03 மாணவர்களுக்கு ஒரு வருட வகுப்புத்தடையும் 04 மாணவர்களுக்கு 06 மாத கால வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

கலைப்பிரிவின் மூன்றாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரியே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ். அனுஷன் தெரிவித்துள்ளார். \

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்