தென் கொரியாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரிப்பு

தென் கொரியாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரிப்பு

தென் கொரியாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2021 | 6:28 pm

Colombo (News 1st) தென் கொரியாவில் மரணங்கள் அதிகரித்துச் செல்வது தொடர்பில் புதிய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிறப்புகளை விட இறப்புகள் அதிகரித்திருந்ததாக தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே உலகின் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்ட தென் கொரியாவில் இது பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு 275,800 குழந்தைகள் பிறந்த அதேநேரம் 307,764 பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டின் பிறப்புக்கள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 வீதம் குறைவெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிறப்பு வீதம் குறைவடைந்து, இறப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து நாட்டின் கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்வதற்கான அழைப்புகளை தென் கொரிய உள்விவகார அமைச்சு விடுக்கவுள்ளது.

குறைந்துவரும் சனத்தொகை தென் கொரியாவிற்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நாட்டில் குறைவடையும் இளைஞர் தொகையால், தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழியேற்படுவதுடன் இது நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்