உக்ரைன் சுற்றுலா பயணிகளின் சிகிரியா, பொலன்னறுவை பயணங்கள் இரத்து

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் சிகிரியா, பொலன்னறுவை பயணங்கள் இரத்து

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் சிகிரியா, பொலன்னறுவை பயணங்கள் இரத்து

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2021 | 2:25 pm

Colombo (News 1st) நாட்டுக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் சிகிரியா மற்றும் பொலன்னறுவைக்கான சுற்றுலா பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இன்றும் (04) நாளையும் (05) பொலன்னறுவை மற்றும் சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாவில் ஈடுபடவிருந்ததாக நிதியம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இன்று மாலை பொலன்னறுவை சுற்றுலா வலயத்தின் புராதன இடங்களுக்கும் சிகிரியா சுற்றுலா வலயத்திற்கும் செல்லவிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் யால சரணாலயத்திற்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறியமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளினால் சுற்றுலா அமைச்சினால் உக்ரைன் பயணிகளின் பொலன்னறுவை மற்றும் சிகிரியாவுக்கான சுற்றுலாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்