by Staff Writer 03-01-2021 | 2:59 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று நிலை காரணமாக வௌிநாடுகளில் சிக்கியுள்ள மேலும் 68,000 இலங்கை பிரஜைகள், நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அமைச்சின் செயலாளர் அத்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை 137 நாடுகளிலிருந்து 60,470 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
நேற்றிலிருந்து (02) எதிர்வரும் 9ஆம் திகதி வரை 1400 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்ப்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கான நலன்களுக்காக 80 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
வரலாற்றில் முதற்தடவையாக மாலே, துபாய், தோஹா ஆகிய நாடுகளுக்கு 10000 இற்கும் மேற்பட்ட உலர் உணவுப்பொருட்கள் மற்றும் உள்நாட்டு மருந்துப் பக்கற்றுகளை விமானத்தினூடாக அனுப்பி வைத்ததாக வௌிவிவகார அமைச்சு தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.