மெனிங் சந்தைத் தொகுதிக்கு சென்றிருந்த 7 பேருக்கு கொரோனா

by Staff Writer 02-01-2021 | 8:24 PM
Colombo (News 1st) பேலியகொடை புதிய மெனிங் சந்தைத் தொகுதிக்கு சென்றிருந்த 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேலியகொடை மெனிங் சந்தையில் நேற்று முன்தினம் (31) எழுமாற்றாக நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான அந்த 7 பேரும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். பேலியகொடை புதிய மெனிங் சந்தை கட்டடத் தொகுதியில் சுகாதார தரப்பு, பாதுகாப்புத் தரப்பு மற்றும் வியாபாரிகளின் பங்களிப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது, வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி செயற்படுவதற்காக வியாபாரிகளை உள்ளடக்கிய குழுவை நியமிக்கும் நடவடிக்கை இன்று இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.