மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த கைதி கோமா நிலையில்

மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த கைதி கோமா நிலையில்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2021 | 9:31 pm

Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த கைதி ஒருவர், கோமா நிலையில் இருப்பதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அவர்கள் இதனை பகிரங்கப்படுத்தினர்.

கம்பஹா – மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே முல்லேரியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தனர்.

இதனிடையே மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக ஆராய்வற்காக நியமிக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இயலுமான விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சு தெரிவித்தது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமொன்றை தயாரிப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்தார்.

குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்