கொரோனாவிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 826 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 01-01-2021 | 7:01 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான 826 பேர் இன்று (01) குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,155 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 43,299 பேருக்கு COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 6,940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளாகி 204 பேர் உயிரிழந்துள்ளனர்.