மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் Lockdown  

by Staff Writer 01-01-2021 | 3:09 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாணத்தின் இரண்டு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனையில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கல்முனை பகுதியில், கல்முனை - 1, கல்முனை - 1 C, கல்முனை - 1E, கல்முனை - 2, கல்முனை - 2 A, கல்முனை - 2B, கல்முனை - 3, கல்முனை - 3 A, கல்முனைக்குடி - 1, கல்முனைக்குடி - 2, கல்முனைக்குடி - 3 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.