சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஐவருக்கு பதவி உயர்வு 

சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஐவருக்கு பதவி உயர்வு 

சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஐவருக்கு பதவி உயர்வு 

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2021 | 5:32 pm

Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 05 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய, சிரேஷ்ட பிரிகேடியர்களாக செயற்பட்ட ஐவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா
பிரிகேடியர் தம்மி ஹேவகே
பிரிகேடியர் அஜித் திசாநாயக்க
பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன
பிரிகேடியர் லால் சந்திரசிறி ஆகியோர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் விசேட படையணியிலுள்ள 560 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

விசேட படையணியை சேர்ந்த பெருமளவானர்கள் ஒரே தடவையில் பதவி உயர்த்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை இராணுவ விசேட படையணியின் 24 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்