கொரோனா ஒழிப்பிற்கான மாவட்ட இணைப்பதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் 

கொரோனா ஒழிப்பிற்கான மாவட்ட இணைப்பதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் 

கொரோனா ஒழிப்பிற்கான மாவட்ட இணைப்பதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் 

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2021 | 3:57 pm

Colombo (News 1st) கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கான இணைப்பதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு இராணுவ உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் நேற்று (31) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறையினருடன் இணைந்து இன்று முதல் இந்த இராணுவ உத்தியோகத்தர்கள், COVID – 19 ஒழிப்புக்கான தேசிய செயலணியுடன் செயலாற்றவுள்ளனர்.

மாவட்ட ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்தல், மருந்துகள், மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுத்தல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் புதிய இணைப்பதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 18 மேஜர் ஜெனரல்களும் 5 பிரிகேடியர்களும் 2 கேர்ணல்களும் COVID – 19 தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக 25 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் W G H A S பண்டார – யாழ்ப்பாணம்
மேஜர் ஜெனரல் K N S கொட்டுவேகொட – கிளிநொச்சி
மேஜர் ஜெனரல் R M P G ரத்நாயக்க – முல்லைத்தீவு
மேஜர் ஜெனரல் W L P W பெரேரா – வவுனியா
மேஜர் ஜெனரல் A A I J பண்டார – மன்னார்
மேஜர் ஜெனரல் J C கமகே – பொலன்னறுவை
மேஜர் ஜெனரல் H L V M லியனகே – அனுராதபுரம்
மேஜர் ஜெனரல் A P I பெர்னாண்டோ – புத்தளம்
பிரிகேடியர் P M R H S K ஹேரத் – குருநாகல்
மேஜர் ஜெனரல் K W R த ஆப்ரூ – கொழும்பு
மேஜர் ஜெனரல் N R லமாஹேவா – கம்பஹா
பிரிகேடியர் K N D கருணாபால – களுத்துறை
மேஜர் ஜெனரல் H P N K ஜயபத்திரன – நுவரெலியா
மேஜர் ஜெனரல் S M S P B சமரக்கோன் – கண்டி
மேஜர் ஜெனரல் S U M N மானகே – மாத்தளை
பிரிகேடியர் J M R N K ஜயமான்ன – இரத்தினபுரி
பிரிகேடியர் L A J L B உதோவிய – கேகாலை
மேஜர் ஜெனரல் C D வீரசூரிய – திருகோணமலை
மேஜர் ஜெனரல் T D வீரக்கோன் – அம்பாறை
மேஜர் ஜெனரல் C D ரணசிங்க – மட்டக்களப்பு
பிரிகேடியர் E A P எதிரிவீர – பதுளை
கேர்ணல் D U N சேரசிங்க – மொனராகலை
மேஜர் ஜெனரல் D M H D பண்டார – ஹம்பாந்தோட்டை
மேஜர் ஜெனரல் W A S S வனசிங்க – காலி
கேர்ணல் K A U கொடித்துவக்கு – மாத்தறை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்