20 ரூபா நாணயக்குற்றி வௌியீடு: ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது

20 ரூபா நாணயக்குற்றி வௌியீடு: ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது

20 ரூபா நாணயக்குற்றி வௌியீடு: ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2020 | 6:11 pm

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்‌ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 20 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்பட்டுள்ளது.

அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் 20 ரூபா நாணயக்குற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய 20 ரூபா நாணயக் குற்றிகள் மூவாயிரம் இன்று வௌியிடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டிற்கு அன்றி, மத்திய வங்கியின் தலைமையகம் மற்றும் மாவட்ட கிளைகளில் 1300 ரூபாவிற்கான 20 ரூபா நாணயக்குற்றிகளை மாத்திரம் விநியோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்