யேமன் விமான நிலைய வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலி

யேமன் விமான நிலைய வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழப்பு 

by Staff Writer 31-12-2020 | 6:31 AM
Colombo (News 1st) யேமன் நாட்டின் Aden விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். யேமனில் அமைக்கப்பட்ட புதிய அரசின் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த விமானம் ஏடன் விமான நிலையத்தில் தரையிறங்கியதன் பின்னர் சிறிது நேரத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தில் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சி குழுவே காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யேமனில் 2015 இல் உக்கிரமடைந்து போரில் 110,000 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். தொடர்ந்து பாரிய மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.