நாட்டின் கொரோனா நிலவரம்

நாட்டின் கொரோனா நிலவரம்

by Chandrasekaram Chandravadani 31-12-2020 | 12:24 PM
Colombo (News 1st) நேற்று (30) முதல் இன்று (31) காலை வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 639 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. இவர்களுள் மூவர் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 190 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 133 பேரும் கண்டி மாவட்டத்தில் 89 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 42 பேரும் யாழ். மாவட்டத்தில் 21 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களனி பிரசேத்தில் 09 பேர், கொச்சிக்கடை பகுதியில் மூவர், வத்தளை பகுதியில் 08 பேர் உள்ளடங்கலாக கம்பஹா மாவட்டத்தில் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் அடையாளம் காணப்பட்ட 133 பேரில், கொள்ளுப்பிட்டி பகுதியில் 06 பேரும் பொரளையில் நால்வரும் மட்டக்குளி பகுதியில் 11 நபர்களும் அவிசாவளை பிரதேசத்தில் 83 நபர்களும் மருதானையில் ஒருவரும் அடங்குகின்றனர். மொத்தமாக 42,702 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 34,623 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு, கொழும்பு 10,கொழும்பு 15 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நால்வர் நேற்று (30) உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 199 பேர் மரணித்துள்ளனர். கத்தாரிலிருந்து 38 பேர் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ள அதேநேரம், ஓமான், மாலைதீவு, இத்தாலி, பாகிஸ்தான், ருவண்டா, இந்தியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் பலர் இன்று வருகை தரவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.