by Staff Writer 31-12-2020 | 8:27 PM
Colombo (News 1st) காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மீன்பிடிப் படகொன்றிலிருந்து 6 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் மாத்தறை , நீர்கொழும்பு மற்றும் பானம பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
குறித்த படகிலிருந்து 5.9 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் 1.9 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பின் போது படகிலிருந்த மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளார்.
சிலாபத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான படகொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.