மன்னாரில் காணாமல் போயிருந்த கிராம சேவகர் சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமல் போயிருந்த கிராம சேவகர் சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமல் போயிருந்த கிராம சேவகர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2020 | 12:00 pm

Colombo (News 1st) மன்னார் – நானாட்டான் அருவியாற்றுப்பகுதியில் நீராடச் சென்ற நிலையில்  நீரில் மூழ்கிக் காணாமல் போன கிராம உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரிப்பு – பழைய தோனித்துறை பகுதியில் இன்று (31) காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கடமையாற்றிய 26 வயதான கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் (29) அருவியாற்று பகுதியில் நீராடச் சென்ற போதே இவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இவர் அங்கு நீராடச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்