மட்டக்களப்பில் 3 நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவித்தல்

மட்டக்களப்பில் 3 நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவித்தல்

மட்டக்களப்பில் 3 நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2020 | 4:21 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மாநகர சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இந்த வர்த்தக நிலையங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்