English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Dec, 2020 | 8:52 am
Colombo (News 1st) பொலன்னறுவை – கல்லேல்ல COVID – 19 சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று (31) அதிகாலை இவர்கள் ஐவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
22, 23, 26, 32 மற்றும் 52 வயதானவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718 591 233 என்ற இலக்கத்தினுடாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS