காத்தான்குடியை தனிமைப்படுத்துமாறு அரசாங்க அதிபர் பரிந்துரை 

காத்தான்குடியை தனிமைப்படுத்துமாறு அரசாங்க அதிபர் பரிந்துரை 

எழுத்தாளர் Staff Writer

31 Dec, 2020 | 7:04 am

Colombo (News 1st) மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியை தனிமைப்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05 நாட்களுக்கு குறித்த பகுதியை தனிமைப்படுத்துவது தொடர்பில் COVID – 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணிக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் நேற்று (30) மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பில் இன்று (31) மாத்திரம் மருந்தகங்கள் மற்றும் மளிகைப்பொருள் விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடுமாறு மாநகர மேயர் டி. சரவணபவன் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்