2021-இன் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பம்

2021-இன் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பம்

2021-இன் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 6:02 pm

Colombo (News 1st) அடுத்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செய்தியை அறிக்கையிடுவதற்கு மீண்டும் ஊடகவியலாளர்கள்கு அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

விசேட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

ஜனவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இந்த காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது.

ஜனவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்