மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய ஜனாதிபதி கெப்பித்திகொல்லாவைக்கு விஜயம்

by Staff Writer 30-12-2020 | 7:45 PM
Colombo (News 1st) கிராமத்துடன் உரையாடல் திட்டத்தின் நான்காம் கட்டம் இன்று கெப்பித்திகொல்லாவ பகுதியில் நடைபெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கெப்பித்திகொல்லாவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணுகஹவெவ கிராமத்திற்கு இன்று ஜனாதிபதி சென்றிருந்தார். நெல் மற்றும் சேனைப் பயிர்செய்கையை இப்பிரதேச மக்கள் ஜீவனோபாயமாக மேற்கொள்கின்றனர். இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் காட்டு யானை பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். பிரதேச மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இப்பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், கணினி வசதிகளைக் கொண்ட வகுப்பறையொன்றும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.