உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு கொரோனா 

by Staff Writer 30-12-2020 | 11:36 AM
Colombo (News 1st) நாட்டிற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த உக்ரைன் பிரஜைகளில் மூவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் நேற்றிரவு (29) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளை மருத்துவ சிகிச்சைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உக்ரைனிலிருந்து 180 சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த விமானம் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கியது. இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துவரும் செயற்றிட்டத்தின் கீழ் இவர்கள் வரவழைக்கப்பட்டனர். நாட்டை வந்தடைந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெந்தோட்டை மற்றும் கொக்கல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.