மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தாமதமாகக்கூடும்: G.L. பீரிஸ்

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தாமதமாகக்கூடும்: G.L. பீரிஸ்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 8:39 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்தார்.

முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகள் தொடர்பாகவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் பாடசாலைகளை திறப்பது சற்றுக் கடினம். சுகாதார நிலைமை, COVID-19 நிலைமை குறித்து நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம். இயலுமான வரையில் விரைவாக அவற்றைத் திறப்போம். முடக்கப்படாத ஏனைய பிரதேசங்களில் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை

என G.L. பீரிஸ் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்