படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு

படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு

படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 7:23 am

Colombo (News 1st) படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துறைசார் அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய உரியமுறையில் நட்ட ஈடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சோள பயிர்ச்செய்கையில் 5 வீதமான நிலப்பரப்பே, படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில், படைப்புழுவினால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் MW.M. வீரக்கோன் தெரிவித்தார்.

அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்ச்செய்கைக்கு இரசாயன கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்