திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் தல்வத்தே கெலும் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் தல்வத்தே கெலும் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் தல்வத்தே கெலும் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 3:30 pm

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான ‘தல்வத்தே கெலும்’ என்றழைக்கப்படும் சரவன கெதர கெலும் உதயகுமார என்பவர் ராகம – பட்டுவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொருவருக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்று சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘ததா சுதா’ என்றழைக்கப்படும் வெல்லம்பகே உபுல் சஞ்ஜீவ பெரேராவின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்