கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Dec, 2020 | 11:59 am

Colombo (News 1st) நேற்றைய தினம் (29) முதல் இன்று (30) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 460 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களில் நால்வர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் எனவும் மூவர் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஞ்சிய 453 பேரில் அதிகளவிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தின் 36 பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தின் கொம்பனித்தெரு பகுதியில் 15 பேர், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 22 பேர், வௌ்ளவத்தை பகுதியில் 07 நபர்கள், பொரளையில் 20 பேர், தெமட்டகொடை பிரதேசத்தில் 18 பேர், மருதானை பகுதியில் 11 பேர், புறக்கோட்டையில் இருவர், புளூமென்டல் பகுதியில் மூவர், கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் ஒருவர், மட்டக்குளி பகுதியில் 24 பேர், மற்றும் அவிசாவளை பிரதேசத்தில் 29 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குகின்றனர்.

நாட்டில் இதுவரை 42,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 33,925 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரு கொரோனா மரணம் பதிவாகிய நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 195 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து 337 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலுள்ள 75 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,362 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் 8,668 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்