எழுமாறான பரிசோதனையில் நேற்று 13 பேருக்கு தொற்று உறுதி

எழுமாறான பரிசோதனையில் நேற்று 13 பேருக்கு தொற்று உறுதி

எழுமாறான பரிசோதனையில் நேற்று 13 பேருக்கு தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 9:59 am

Colombo (News 1st) மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் நேற்று (29) 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் 11 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 74 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் 10,986 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்