by Staff Writer 29-12-2020 | 9:19 PM
Colombo (News 1st) நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஒப்பந்தங்கள் கையளிக்கப்பட்டன.
இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிதாக 3000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, பேலியகொடை, ஒருகொடவத்தை ஆகிய பிரதேசங்களில் இரண்டு கட்டங்களில் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
ஏனைய திட்டங்கள் ப்ளூமெண்டல், மாகும்புர, மாலபே, பொரலஸ்கமுவ, மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த வீடமைப்புத் திட்டத்தை 14 மாதங்களில் நிறைவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
அதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு உடன்படிக்கை பத்திரம் கையளிக்கப்பட்டதுடன், கலாநிதி நாலக கொடஹோ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.