கொரோனா தொற்று: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2020 | 9:06 pm

Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (28) ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்றுடன் கூடிய நிமோனியா காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 90 வயதான ஆணும் தெல்தெனிய பகுதியை சேர்ந்த 83 வயதான நபரும் களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 57 வயதான பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 41,603 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 8 ,188 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

33,221 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்