எழுமாறான கொரோனா பரிசோதனையில் 61 பேருக்கு தொற்று உறுதி

எழுமாறான கொரோனா பரிசோதனையில் 61 பேருக்கு தொற்று உறுதி

எழுமாறான கொரோனா பரிசோதனையில் 61 பேருக்கு தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2020 | 11:29 am

Colombo (News 1st) எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10,000 பேருக்கு எழுமாறாக COVID – 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் இன்று (29) காலை 06 மணி வரையான காலப்பகுதிக்குள் இவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அவர்களில் நேற்று மாத்திரம் 07 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

எழுமாற்று பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் நெருங்கி பழகிய 300 இற்குகும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை எழுமாற்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்