by Staff Writer 29-12-2020 | 1:17 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.
அதன்பிரகாரம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 01 வெற்றியை பெற்றுள்ளன.
மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பதிலளித்தாடிய இந்தியா அஜின்கெயா ரஹானேவின் சதத்துடன் 326 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் பெற்றது.
அதன்படி நேற்றைய மூன்றாம் நாளில் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா 02 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
06 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
கெமரோன் க்ரீன் மற்றும் பெட் கம்மினஸ் ஜோடி ஏழாவது விக்கெட்டில் 50 ஓட்டங்களை பகிர்ந்து ஆறுதலளித்தது.
கெமரோன் க்ரீன் 45 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அவுஸ்திரேலியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் 200 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
அதன்படி போட்டியில் இந்தியாவின் வெற்றியிலக்கு 70 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
மொஹமட் சிராஜ் 03 விக்கெட்களை வீழ்த்தியதுடன் ஜெஸ்ப்ரீட் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்தியா வெற்றியிலக்கை 02 விக்கெட் இழப்புக்கு கடந்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஜின்கெயா ரஹானே தெரிவானார்.