அரசியலுக்கு வர முடியவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

அரசியலுக்கு வர முடியவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

அரசியலுக்கு வர முடியவில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2020 | 2:58 pm

அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப் பெற்றுள்ளார்.

தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தனது உடல்நலன் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் போன்ற காரணங்களினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த், இது தொடர்பில் மன்னிப்புக் கோருவதாகவும் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்