மேலும் சில பொலித்தீன், பிளாஸ்டிக்களுக்கு தடை

மேலும் சில பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்களுக்கு தடை

by Staff Writer 28-12-2020 | 2:34 PM
Colombo (News 1st) ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தடை விதிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சமீபத்தில் 6 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடை செய்யப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் முதலாம் திகதி வௌியிடப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, செஷே பெக்கட்கள், கொட்டன் பட், லன்ச்ஷீட் மற்றும் 6 வகையாள பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.