by Staff Writer 28-12-2020 | 7:09 PM
Colombo 9News 1st) மன்னாரில் கனிய வள அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அமைப்பும் ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.
மன்னார் நகர பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த கவனயீர்ப்பில் சர்வ மத தலைவர்கள், பொது அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
கனிய வள அகழ்விற்கு எதிராக இதன்போது கையெழுத்துகள் பெறப்பட்டன.
இதனையடுத்து, ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு தெரிவித்து, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நந்தினி ஸ்ரான்லி டிமேலிடம் மகஜரொன்று வழங்கப்பட்டது.