இராணுவத் தளபதி ஜெனரலாக பதவியுயர்வு

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஜெனரலாக பதவியுயர்வு 

by Staff Writer 28-12-2020 | 7:37 PM
Colombo (News 1st) இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஜெனரல் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.