ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Dec, 2020 | 8:34 pm

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று (28) காலமானார்.

உடல்நல குறைவால் இன்று தனது தாயார் சென்னையில் காலமாகியதாக ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாயாருடன் ஏ.ஆர். ரஹ்மான்

இவரது மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் ரஹ்மானின் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது அனைத்து சாதனைகளுக்கு தாயாரே பக்கபலமாக இருந்தார் எனவும் அவர் தான் சூப்பர் ஸ்டார் எனவும் ஏ.ஆர். ரஹ்மான் தனது செவ்விகளில் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்