20,000 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்

20,000 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்

20,000 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2020 | 2:11 pm

Colombo (News 1st) ஹுங்கம – கலமெடியாவ பகுதியில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 20,000 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய, கலமெட்டிய – குருபொக்குன மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ட்ரோலர் படகொன்றிலிருந்து மஞ்சள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மஞ்சள் தொகையை கொண்டு செல்வதற்கு வந்திருந்த இரண்டு லொறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் தவிர, வேறு சிலரும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்