தப்பிச் சென்ற கொரோன நோயாளர் கண்டுபிடிப்பு 

தப்பிச் சென்ற கொரோன நோயாளர் கண்டுபிடிப்பு 

தப்பிச் சென்ற கொரோன நோயாளர் கண்டுபிடிப்பு 

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2020 | 1:39 pm

Colombo (News 1st) சப்புகஸ்கந்த பகுதியில் COVID – 19 தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச் சென்ற இளைஞர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

PCR பரிசோதனையின் முடிவுகள் வௌியாகும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த குறித்த இளைஞர், தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தப்பிச் சென்றிருந்தார்.

சப்புகஸ்கந்த – மாகொல வடக்கு பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே, தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்றிருந்தார்.

இந்நிலையில், குறித்த இளைஞரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியிருந்தனர்.

இதனடிப்படையில் இன்று (27) முற்பகல் 11.30 மணியளவில் மாகொல பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞர் மறைந்திருந்த வீட்டிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த கொரோனா நோயாளருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதன் பின்னர், தப்பிச் சென்ற குற்றச்சாட்டிற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்