கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய கடனுதவி

25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

by Staff Writer 26-12-2020 | 7:12 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸிற்கான 25 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 84 மில்லியன் அமெரிக்க டொலரை கொண்ட முதலாவது தவணையை வழங்குவதற்காக, நிதி அமைச்சு மற்றும் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தினார். தேவைக்கேற்ற வகையில் இந்தத் தொகையை 200 மில்லியன் டொலர் வரை அதிகரிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.