சுனாமி பேபியின் தற்போதைய நிலை என்ன?

by Staff Writer 26-12-2020 | 10:07 PM
Colombo (News 1st) இற்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று போன்றதோர் நாளில் காணாமற்போன ஒரு குழந்தை தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெரிதும் பேசப்பட்டது. ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகவிருந்த அந்தக் குழந்தையை சுனாமி பேபி 81 என்றே அன்று அனைவரும் அழைத்தனர். 2004 ஆம் ஆண்டு குழந்தையாக இருந்த சுனாமி பேபி 81, பதினாறு ஆண்டுகளின் பின்னர் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறது? சுனாமி பேரிடரால் கல்முனை வைத்தியசாலை முழுவதுமாக அல்லோகல்லப்பட்டிருந்தது. அப்போது கல்முனை வைத்தியசாலையில் தொட்டிலில் தவழ்ந்துகொண்டிருந்த அந்த சுனாமி பேபி 81-க்கு உரிமை கோரி 9 தாய்மார் குரலெழுப்பினர். 9 பெற்றோரும் மரபணு பரிசோதனையை வழங்குமாறு நீதிமன்றம் பணித்தது. அன்றிலிருந்து 52 ஆவது நாளில் சுனாமி பேபி 81 ,ஜெயராஜ், ஜூனிலதா தம்பதியினரின் குழந்தை அபிலாஷ் என உறுதி செய்யப்பட்டு பெற்றோரின் அன்புக் கரங்களில் பிஞ்சுக் குழந்தை தவழ்ந்தது. 'சுனாமி பேபி 81' என்று அடையாளப்படுத்தப்பட்ட அபிலாஷ் அம்பாறை - செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் தனது 16 ஆவது வயதில் தரம் 11-இல் தற்போது கல்வி கற்று வருகின்றார்.