இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த ஆடைகளுக்கு வரி

இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த தைத்த ஆடைகளுக்கு வரி அறிவிட தீர்மானம்

by Staff Writer 26-12-2020 | 2:42 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த தைத்த ஆடைகளுக்கு வரி அறிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பத்திக், உள்நாட்டு ஆடைகள் மற்றும் உள்நாட்டு ஆடைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இறக்குமதி செய்யப்படும் தரமற்ற ஆடைகளுக்கு வரியை விதிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். குறைந்த விலைக்கு வௌிநாடுகளில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாரிய வகையில் பாதிக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் தயாரிக்கப்படும் புதிய வகை ஆடைகளை ஏற்றுமதி செய்யவும் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிகாட்டினார்.