வெவ்வேறு வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழப்பு

வெவ்வேறு வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழப்பு

வெவ்வேறு வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2020 | 4:49 pm

Colombo (News 1st) வெல்லவாய, குட்டிகல, மிஹிந்தலை, கொக்கரெல்ல மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய – தனமல்வில வீதி பகுதியில் வேனும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குட்டிகல, எம்பிலிப்பிட்டி நோனகம வீதியின் 42 ஆம் இலக்க சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் 47 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிஹிந்தலை – ரம்பேவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை – குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று கால்வாய் ஒன்றினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்