ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

25 Dec, 2020 | 2:48 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவின் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தலில் இருந்துவந்த அவர் இன்று (25) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றில்லை என தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் இரத்த அழுத்த மாறுபாட்டை தவிர வேறெந்த உடல்நல குறைபாடும் இல்லை எனவும் குருதி அழுத்தம் சீரானதும் வீடு திரும்புவார் எனவும் குறித்த வைத்தியசாலை நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்