போலி ஆவணங்களூடாக வாகனங்கள் பதிவு: விசாரணை ஆரம்பம்

போலி ஆவணங்களூடாக வாகனங்கள் பதிவு ; விசாரணைகள் ஆரம்பம் 

by Staff Writer 24-12-2020 | 2:16 PM
Colombo (News 1st) போலி ஆவணங்களை தயாரித்து 700 வாகனங்களை பதிவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து தரவுகளையும் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். கணினி கட்டமைப்பில் போலியான தரவுகள் சரியான முறையில் தரவேற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் யார் என்பது குறித்து விரைவில் கண்டறிய முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். வாகனங்களை இறக்குமதி செய்து போலி ஆவணங்களூடாக அவற்றை இரண்டாம் தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனூடாக தற்போது வாகனங்களை வைத்திருப்போருக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால், போலி ஆவணங்களூடாக வாகனங்களை பதிவு செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.