பிரித்தானியாவில் 85 பேரில் ஒருவருக்கு கொரோனா

பிரித்தானியாவில் 85 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 24-12-2020 | 5:48 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் 85 பேரில் ஒருவருக்கு COVID-19 தொற்று உள்ளதாக அந்நாட்டு தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் புதிய மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி வரையிலான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த வாரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,70,000 ஆக பதிவாகியிருந்ததுடன், இந்த வாரத்தில் குறித்த எண்ணிக்கை 6 ,50,000 ஆக அதிகரித்துள்ளது. வேல்சில் 60 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2 வீதத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் தலைநகர் லண்டன், இங்கிலாந்தின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பிரித்தானியாவுடனான விமானப் பயணங்களை இரத்து செய்துள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவும் இணைந்துள்ளது.