தடுப்புமருந்து ஒப்பந்தத்தில் தென்கொரியா கைச்சாத்து

தடுப்பு மருந்து ஒப்பந்தத்தில் தென் கொரியா கைச்சாத்து

by Staff Writer 24-12-2020 | 12:43 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பு மருந்தினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் தென் கொரியா கைச்சாத்திட்டுள்ளது. இதனடிப்படையில், தென் கொரியா 16 மில்லியன் மக்களுக்கான தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்ளவுள்ளது. நாட்டில் மூன்றாம் கொரோனா அலை பரவி வரும் நிலையில் Pfizer உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தென் கொரிய பிரதமர் Chung Sye-kyun இன்று அறிவித்துள்ளார். நாட்டில் நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து குறித்த மக்களின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவில் 53,533 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 756 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தென் கொரியாவிலுள்ள சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டுள்ளன.