கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்...

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்...

by Chandrasekaram Chandravadani 24-12-2020 | 9:07 AM
Colombo (News 1st) நேற்று (23) முதல் இன்று (24) வரையான 24 மணி நேரத்திற்குள் நாட்டில் புதிதாக 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் வௌிநாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தவராவார். கொழும்பு மாவட்டத்தில் 228 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 108 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 நபர்களும் அம்பாறையில் 05 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் புத்தளத்தில் ஒருவரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 18 பேரும் நுவரெலியாவில் 15 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 04 நபர்களும் மாத்தளையில் 06 பேரும் வவுனியா மாவட்டத்தில் 02 பேரும் கேகாலை மாவட்டத்தில் 07 நபர்களும் நேற்றைய தினம் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குகின்றனர். மேலும் சிறைச்சாலைகள் கொத்தணிகளில் நீர்கொழும்பு சிறையில் 15 கைதிகளும் மஹர சிறைச்சாலை கைதிகள் 49 பேரும் போகம்பறை சிறையில் 07 கைதிகளும் பூசா சிறைச்சாலை கைதி ஒருவரும் உள்ளடங்குகின்றனர். மன்னார், பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு மாவட்டத்தில் கொம்பனித்தெரு பகுதியில் 26 பேர், கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் 29 பேர், கொள்ளுப்பிட்டியில் இருவர், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் இருவர், கிருலப்பனை பகுதியில் 06 பேர், பொரளை பிரதேசத்தில் 06 நபர்கள், மருதானை பகுதியில் 21 பேர், புறக்கோட்டை பகுதியில் இருவர், புளூமென்டல் பிரதேசத்தில் 14 பேர், கிரேண்ட்பாஸ் பகுதியில் 09 பேர், மட்டக்குளி பிரதேசத்தில் 03 நபர்கள் அவிசாவளையில் 99 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர். அவிசாவளையிலுள்ள இரு தொழிற்சாலைகளில் 90 இற்கும் அதிகமானோர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் 21 பேரும் கடவத்தை பகுதியில் 50 பேரும் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 108 பேருள் அடங்குகின்றனர். நாட்டில் மொத்தமாக 38,639 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 29,882 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று (23) களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184 ஆகியது. 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,284 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்