எம்.ஜி.ஆரா... அரவிந்த் சாமியா?

எம்.ஜி.ஆரா... அரவிந்த் சாமியா?

by Bella Dalima 24-12-2020 | 3:51 PM
எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக ‘தலைவி’ உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இந்நிலையில், இன்று அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆராக 1 மணிநேரம் நடித்தது வெறும் கெளரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு. என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவாக இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன்,'' என்றும் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.