மேலும் 03 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டன 

மேலும் 03 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டன 

மேலும் 03 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டன 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Dec, 2020 | 2:28 pm

Colombo (News 1st) அவிசாவளை, கொஸ்கம மற்றும் ருவன்வெல்ல ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உடன் அமுலாகும் வகையில் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக குறித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – வெல்லம்பிட்டிய, லக்சந்த செவன தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதி இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் குறித்த குடியிருப்பு தொகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்