திருகோணமலையில் இரு பகுதிகள் Lockdown 

திருகோணமலையில் இரு பகுதிகள் Lockdown 

திருகோணமலையில் இரு பகுதிகள் Lockdown 

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2020 | 10:09 am

Colombo (News 1st) திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகள் இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 02 நாட்களாக குறித்த பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்