இடப்பற்றாக்குறையை சமாளிக்க 8600 கைதிகளுக்கு பிணை

இடப்பற்றாக்குறையை சமாளிக்க 8600 கைதிகளுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2020 | 6:57 pm

Colombo (News 1st) சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 8600 கைதிகளை பிணையில் விடுவிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சிறைக்கைதிகளுக்கு அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளதால், குழப்பங்கள் உருவாவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நீதி அமைச்சர், சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி 8600 பேரை பிணையில் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

”சிறைக் கைதிகளின் நெரிசலைக் குறைக்கும் பட்சத்தில், இந்த பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். அவ்வாறான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் மேற்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளப்படும்,” எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்